"டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-10-15 20:06 GMT
தமிழகத்தில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்க கோரியும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சுகாதரத்துறை சார்பில் அதன் கூடுதல் செயலர் செல்வகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர டெங்கு காய்ச்சல் வார்டு இயங்கி வருவதாகவும் டெங்கு பாதிப்பை கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்க  நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடிஸ் கொசு உற்பத்தியை தடுத்திட 9 மண்டலங்களில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக, தமிழகம் முழுதும் 28 ஆயிரத்து 147 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசின் தீவிர கண்காணிப்பின் மூலம் டெங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இழப்பீடு வழங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்