திருச்சி - ஐதராபாத்திற்கு புதிய விமான சேவை - தீபாவளி முதல் அறிமுகம்

திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு 74 இருக்கைகளை கொண்ட விமானத்தை இண்டிகோ விமான நிறுவனம் இயக்க உள்ளது.

Update: 2019-10-01 20:05 GMT
திருச்சியில் இருந்து ஐதராபாத்திற்கு 74 இருக்கைகளை கொண்ட விமானத்தை இண்டிகோ விமான நிறுவனம் இயக்க உள்ளது. இதன்படி, வரும் 27 ம் தேதி முதல், தினசரி இரவு, 9.05 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்திற்கு இரவு, 11.30 மணிக்கு வந்தடையும். அதேபோல் திருச்சியில் இருந்து இரவு 11.50க்கு புறப்படும்  விமானம் அதிகாலை 2.10 மணிக்கு ஜதராபாத் சென்றடையும். 
 

Tags:    

மேலும் செய்திகள்