நகராட்சியை கண்டித்து நாகூரில் முழு கடையடைப்பு

நாகூர் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2019-09-24 10:10 GMT
நாகூர் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் 800-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.  சுற்றுலா தலமான நாகூரில் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வெளியூரில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . சொத்து வரி உயர்வு முறைகேட்டை தடுப்பதுடன், அடிப்படை வசதிகளை மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் விரைந்து செய்து தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்