தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு - ஒரு கிராம் விலை ரூ.3,603 க்கு விற்பனை

தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், இன்று சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாயாக விற்பனை ஆகிறது.

Update: 2019-09-21 13:04 GMT
தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், இன்று சவரனுக்கு 136 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 824 ரூபாயாக விற்பனை ஆகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரு கிராம் சவரன் 3 ஆயிரத்து 586 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி கிராமுற்கு 17 ரூபாய் உயர்ந்து  3 ஆயிரத்து 603 ரூபாயாக விற்பனையாகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 30 ஆயிரம் ரூபாயை தொட்ட நிலையில், அதன் பின்னர் படிப்படியாக குறைந்து ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய் என்கிற அளவில் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக விற்பனையாகி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்