ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது

அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2019-08-19 01:41 GMT
அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மெஜந்தா நிற கவரில் உள்ள இருநிலை சமன்படுத்திய ஆவின் பால் ஒரு லிட்டர் 34 ரூபாயில் இருந்து 40 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. நீல நிற கவரில் உள்ள சமன்படுத்திய பால் ஒரு லிட்டர் 37 ரூபாயில் இருந்து 43 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

பச்சை நிற கவரில் உள்ள நிலைப்படுத்திய பால் ஒரு லிட்டர் 41 ரூபாயில் இருந்து 47 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆரஞ்சு நிற கவரில் உள்ள நிறை கொழுப்பு பால் ஒரு லிட்டர் 45 ரூபாயில் இருந்து 51 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்