ராமேஸ்வரத்தில் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை

ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-05 14:21 GMT
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசுவதன் காரணமாக 3வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 50 கிலோ மீட்டருக்கு மேல் காற்று வீசி வருவதால், கடல் அலைகளும் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய மீன்வளத்துறை, கடந்த மூன்று தினங்களாக விசைப் படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்காமல் உள்ளது. இந்நிலையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்