1,000 தனியார் பள்ளிகள் விதிகளை மீறி கல்வி கட்டணம் : கட்டண நிர்ணயக் குழு குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் 1000 தனியார் பள்ளிகள், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்கு விண்ணப்பிக்காமல் இருப்பதாக கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது.

Update: 2019-08-01 10:35 GMT
தனியார் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழக அரசால் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக்குழு கல்வி கட்டணங்களை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 7000 பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனாலும் இன்னும் 1,000 தனியார் பள்ளிகள், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிப்பதற்கு விண்ணப்பிக்காமல் இருப்பதாகவும் கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்டண நிர்ணய காலம் முடிந்த தனியார் பள்ளிகள் உடனடியாக கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்