கேரளாவில் 4 கிலோ தங்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வடமாநில கும்பல் கைது
கேரளாவில் 4 கிலோ தங்கம் மற்றும் 20 லட்ச ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையர்கள் சேலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.;
கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் உள்ள நகை கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் திருப்பூர் சேலம் வழியாக தப்பிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், இன்று அதிகாலை முதல் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் உத்தமசோழபுரத்தில் போலீசாரை கண்டதும் காரில் வந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காருக்குள் இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு கொள்ளையனும் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பிடிப்பட்டான். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் வந்த வாகனம் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தது என்றும் அவர்கள் ஏற்கனவே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட கொள்ளையர்கள் குறித்து கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து,மேலும் தலைமறைவான ஐந்து கொள்ளையர்கை போலீசார் தேடி வருகின்றனர்.