தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்து - 8 பேர் பலி
கள்ளக்குறிச்சி அருகே தனியார் சொகுசு பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.;
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் மினி வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.