காவிரி டெல்டாவில் 104 எண்ணெய் கிணறுகள் : "அனுமதி வழங்கக் கூடாது" - அன்புமணி கோரிக்கை

காவிரிப் பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-27 13:55 GMT
காவிரிப் பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதற்கு பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை, எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். இதன் ஒரு கட்டமாகவே, காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளதாகவும், காவிரி பாசன மாவட்டங்கள் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், இந்த திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும் என்றும் அன்புமணி எச்சரித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்