இரு சமூகத்தினர் இடையே மோதல் : ஒரு தரப்பை சேர்ந்த 6 பேர் காயம்

புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், 6 பேர் காயமடைந்தனர்.;

Update: 2019-06-26 07:56 GMT
ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில்,  இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒரு பிரிவை சேர்ந்த 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய பிரிவை சேர்ந்தவர்களைக் கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆலங்குடி வடகாடு முகத்தில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்