குற்றால சீசன் தொடங்க தாமதம் - வணிகர்கள் கலக்கம்

இந்த ஆண்டு குற்றால சீசன் தொடங்க தாமதமாவதால் கடைகளை பல லட்சம் கொடுத்து ஏலம் எடுத்த வணிகர்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்று கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2019-06-22 02:31 GMT
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் தென் மேற்குப் பருவமழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை களைகட்டும். இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குற்றாலம் பேரூராட்சி மற்றும் குற்றாலநாதர் ஆலய நிர்வாகம் சார்பில் ஐந்தருவி, பேரருவி ஆகிய அருவிக்கரை பகுதிகளில் நூற்றுக்கணக்கான தற்காலிக மற்றும் நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சீசன் தொடங்க தாமதமாவதால், இந்த கடைகளை பல லட்சம் கொடுத்து ஏலம் எடுத்த வணிகர்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியுமா என்று கலக்கம் அடைந்துள்ளனர். இதனிடையே, இந்த வருடம் போதிய மழை இல்லை என்றால் அடுத்த ஆண்டு இப்பகுதியில் தொழில் தொடங்குவது கேள்விக்குறியே என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்