பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள் : வறட்சியின் காரணமாக விலை உயர்வு

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது.

Update: 2019-06-19 09:34 GMT
சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு அனுப்பப்படும் நுங்குகள், வறட்சியின் காரணமாக விலை அதிகரித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் பதனீர், பனை வெல்லம், பனங் கற்கண்டு உள்ளிட்ட பனை பொருட்கள் தயாரிப்பில் பலர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில்,  கோடைக்காலத்தில் நுங்காக விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதாகவும், பெங்களூருக்கு அனுப்புவதால் நுங்கு விலை அதிகரித்துள்ளதாகவும் கூறினர். பனை மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்படுத்துவதால் பனை மரங்கள் அழிந்து வருவதாகவும், பனை மரங்களை வெட்ட அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்