பேருந்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி
ஒழுகைமங்கலம் பகுதியில் தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.;
காரைக்குடியில் இருந்து தரங்கம்பாடி அருகே ஆணைக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாரிமுத்து, ஆதிஷ், ஆதித்தியன் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது ஒழுகைமங்கலம் பகுதியில் எதிரே வந்த தனியார் பேருந்தில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் தலையில் படுகாயமடைந்தும், உடல் நசுங்கியும் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.