பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் காலமானார்.;
திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இன்று காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால், கிரேஷி மோகன், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனன்றி காலமானார். கிரேஷி மோகனின் மரணம், தமிழ் திரையுலகத்தை மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கிரேஸி மோகனுக்கு எதிரி என்பவர்களே கிடையாது - நடிகர் எஸ்.வி.சேகர்
நகைச்சுவையில் தனித்துவம் வாய்ந்தவர் கிரேஸி மோகன் - நடிகர் சார்லி
கிரேஸி மோகனுக்கு நிகர் அவரே தான் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது - நடிகர் ராதாரவி
நடிகர் கமலுக்கு மிகவும் பிடித்த நகைசுவை நடிகர் கிரேஸி மோகன் - நடிகர் பாண்டு
கிரேஸி மோகனின் புகழ் திரையுலகில் என்றும் மறையாது - நடிகர் தியாகு
நல்ல கருத்துடைய நகைச்சுவையை கொடுத்தவர் கிரேஸி மோகன் - நடிகை சச்சு
கிரேஸி மோகனின் மரணம் அதிர்ச்சியாகவுள்ளது - நடிகை ரோஹிணி