காலி குடங்களுடன் தர்ணா - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;
மதுரை சம்பக்குளம் பகுதியில், குடிநீர் வசதி செய்து தரக்கோரி,ஏராளமான பெண்கள், காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை பழுது பார்த்து உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்பதும் பெண்களின் கோரிக்கையாகும்.