தியாகராஜர் வசந்த உற்சவம் நிறைவு : மாடவீதி புறப்பாடு, திருநடனம் கோலாகலம்

சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி கோயிலில், வசந்த உற்சவ நிறைவை முன்னிட்டு, மாடவீதி புறப்பாடு, திருநடனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.;

Update: 2019-06-03 02:18 GMT
சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரசித்தி பெற்ற தியாகராஜசுவாமி கோயிலில், வசந்த உற்சவ நிறைவை முன்னிட்டு, மாடவீதி புறப்பாடு, திருநடனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  தியாகராஜர், அம்பாளுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில், பல்லக்கில் எழுந்தருள, மஹா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர், வடிவுடையம்மனும், தியாகராஜரும் எதிர்சேவை புரிந்து, திருநடனமாடினார். அப்போது, மல்லி, அரளி, ரோஜா உள்ளிட்ட பலவகை மலர்கள் துாவப்பட்டன. பக்தர்கள், 'தியாகராயா, ஒற்றீஸ்வரா' என பக்தி பரவசத்துடன் முழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்