கோவில்பட்டி : பழமை வாய்ந்த பாரம்பரிய விளையாட்டு போட்டி - இளசுகளுக்கு சவால்விட்ட மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.;

Update: 2019-05-31 04:46 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிராமத்தில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியாக நடைபெற்ற, தானியங்களை கல் திருவையில் போட்டு திரிக்கும் போட்டியில் இளம்பெண்கள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்றனர். அவர்களுக்கு திரிப்பதற்காக பாசி பயறு வழங்கப்பட்டது. இதில் 96 வயது வெங்கடம்மாள் என்ற மூதாட்டி இன்றைய இளம் தலைமுறைக்கு இணையாக கலந்து கொண்டு, தமது திறமையை காட்டி வெற்றி பெற்றார். தொடர்ந்து நவதானியங்களை உரலில் குத்தும் போட்டி நடத்தப்பட்டது. இதிலும் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனையடுத்து இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி, தேங்காய் உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்