குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு

நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.

Update: 2019-05-26 21:20 GMT
நீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி  பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதங்களில் சீசன்  நிலவுகிறது. இந்த சீசனை அனுபவிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியான பழக் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்றது. பூங்கா நுழைவாயிலில்,12 அடி உயரத்தில், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்களை கொண்டு வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் விளையும் பழங்கள், கண்காட்சியில் இடம் பெற்றன. இந்த பழக் கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த அரங்குகள் மற்றும் போட்டியாளர்களுக்கு, சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்