வரத்து குறைந்ததன் எதிரொலி...காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைந்ததன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

Update: 2019-05-26 07:40 GMT
வரத்து குறைந்ததன் காரணமாக  கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. கோடை காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு, காய்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் புடலை, கத்திரிக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஒரு கிலோ தக்காளி விலை 50 ரூபாய்க்கும், வெளி சந்தையில் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பீன்ஸ் விலை 70 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 1 கிலோ இஞ்சி விலை 110 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பச்சை மிளகாய்  தற்போது 55 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் பெரிய வெங்காயம் விலை 12 ரூபாயில் இருந்து 18 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெயிலால் உற்பத்தி சரிவடைந்ததே காய்கறிகள் விலை உயர்வுக்கு காரணமாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்