செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு தள்ளுபடி

தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.;

Update: 2019-04-27 11:59 GMT
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில்  தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கை தொடர்ந்த கீதா என்பவருக்கு 
30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள்,  அந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டனர்.  இது தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததை மறைத்து மனு தாக்கல் செய்ததால் அதனை தள்ளுபடி செய்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்