இராச இராச சோழன் சமாதியில் ஆய்வு

இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-26 07:19 GMT
தஞ்சாவூர் மாவட்டம் உடையாளூரில் இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை  தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது. இராச இராச சோழனின் சமாதி பராமரிப்பு இன்றி சிதைந்து காணப்படுவதாகவும், அங்கு இராச இராச சோழனுக்கு மணிமண்டபம் கட்டி சுற்றுலா தளமாக அறிவிக்க உத்தரவிட கோரியும் திருமுருகன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உடையாளூர் பகுதியில் இராச இராச சோழன் அடக்கம் செய்யபட்ட இடத்தில் தொல்லியல் துறை நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு  செய்து,  சோதனைக்கு அனுப்ப பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்