கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 24 வாரங்களாக உயர்த்த உத்தரவிட கோரிய வழக்கு : மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2019-04-24 19:44 GMT
கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்படி கருவை கலைப்பதற்கான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிக்க பரிந்துரை செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி 20 வாரங்களுக்கு உட்பட்ட கருவை கலைக்க அனுமதி உண்டு என்றும் ஆனால் கருவின்  குறைபாடுகள் 20 வாரங்களுக்கு பின்பே  தெரிய வரும் என்பதால் கருவை கலைக்க விரும்புவர்கள் நீதிமன்றங்களை நாடுமாறு வற்புறுத்தப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  மருத்துவ கருக்கலைப்பு சட்டம் 1971ன்படி கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசத்தை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் என்று தொரிவிக்கப்பட்டது. பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவை கலைக்க குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யக்கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்