தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் : பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி

புதுச்சேரியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.;

Update: 2019-04-21 02:21 GMT
புதுச்சேரியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி - கடலூர் மறைமாவட்ட  பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி  நடைபெற்றது. இதில் இயேசு உயிர்த்தெழுந்து வரும் நிகழ்ச்சி அரங்கேறியது. அப்போது கிறிஸ்துவர்கள் இயேசு மீது மலர்களை தூவி பக்தி பாடல்களை பாடினர். இதேபோன்று  புதுச்சேரியில் உள்ள  தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா ஆலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா ஆலயம்  உள்பட பல்வேறு தேவாலயங்களில் இயேசு பிரான் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் ஈஸ்டர் திருவிழா கொண்டாடப்பட்டது.

ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் : சாந்தோம் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை 



ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சென்னை சாந்தோம் பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், நள்ளிரவு சிறப்பு வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை : இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தினர்



ஈஸ்டர் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.  சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஆரம்பித்த சிறப்புப் பிரார்த்தனை நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் இயேசு உயிர்த்தெழுந்த காட்சி தத்ரூபமாக நடத்தி காண்பிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்