மனிதவள மேம்பாட்டுத் துறை தர வரிசையில் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு 68 வது இடம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 68 வது சிறந்த பல்கலைக் கழகம் என்கிற பெருமை பெற்றுள்ளது.;
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 68 வது சிறந்த பல்கலைக் கழகம் என்கிற பெருமை பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் தேசியத் தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 90 வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 68-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக துணைவேந்தர் குழந்தைவேல் கூறினார். உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையில் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையை ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டு வருகிறது.