தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி
கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டரணியினர்,ஒரு நபரை அடித்து உதைத்து புரட்டி எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.;
வைகோவின் பேச்சை கேட்க முண்டியடித்து கொண்டு அந்த நபர் மேடை நோக்கி முன்னேறியதாக கூறப்படுகிறது. அவரை தடுக்க முயன்ற போது, இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மைக்கில் தொண்டரணியினரை அழைத்து சமாதானப்படுத்தினார்.