சித்த மருத்துவத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? - சுகாதாரத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 5 ஆண்டுகளில் சித்த மருத்துவத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து சுகாதாரத்துறை பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-04-04 22:29 GMT
இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த முருகேசன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள்  கிருபாகரன், சுந்தர்  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உணவே  மருந்து என்ற கட்டுபாட்டுடன் முன்னோர்கள் வாழ்ந்ததாகவும், சித்த மருத்துவதில் நற்பலன்கள் கிடைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த 5 ஆண்டுகளில் சித்த மருத்துவக்கு ஒதுக்கப்பட்ட நிதி, மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள், மற்றும் சித்த மருத்துவ கல்லூரி அடிப்படை வசதிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர்  பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் மத்திய அரசின் ஆயூஷ் அமைப்பையும் எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .
Tags:    

மேலும் செய்திகள்