வருமானவரித்துறை சோதனைக்கு மத்திய அரசே காரணம் - ஆர்.எஸ். பாரதி

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாஹூவை சந்தித்தனர்

Update: 2019-03-31 12:04 GMT
திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி , சட்ட துறை செயலாளர் கிரிராஜன் உள்ளிட்டோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாஹூவை சந்தித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனை, தேர்தல் விதிமீறல் எனவும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.வருமானவரித்துறை சோதனைக்கு மத்திய அரசே காரணம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்