மதுரையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி
மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது;
மதுரையில் சித்திரை திருவிழா அன்று தேர்தல் நடப்பதால் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும், மாணவிகளுக்கு ரங்கோலி போட்டியும் நடைபெற்றது.முன்னதாக பேரணியின் தொடக்கத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்கள் பறக்கவிடப்பட்டன.