அமமுக அலுவலக திறப்பு விழா தகராறு வழக்கு - அமமுக நிர்வாகிகளுக்கு முன்ஜாமீன்
18ஆம் தேதியன்று காரைக்குடியில் அமமுக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது;
கடந்த 18ஆம் தேதியன்று காரைக்குடியில் அமமுக அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.அப்போது அந்த நிகழ்ச்சியை படம்பிடித்த பத்திரிகையாளர் ஜெய்கணேஷ் என்பவரை அக்கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால்,இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதையடுத்து, ஜெய்கணேஷ் கொடுத்த புகாரின் பேரில், மாவட்ட செயலாளர் உமாதேவன் மற்றும் அக்கட்சி நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, உமாதேவன் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உமாதேவன் மற்றும் முருகானந்தம் ஆகிய இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.