சதுரகிரி மலையில் குடிநீர் வசதி கோரி வழக்கு
அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு;
சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கசுவாமி கோயிலில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாக கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,குடிநீர் வசதி செய்து தருவது குறித்து குழு அமைத்து,அறிக்கை தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டார்