மருத்துவமனையில் அனாதையாக விடப்பட்ட குழந்தை - வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரணை
குழந்தை காதுகளில் உள்ள கோளாறு விட்டுச்செல்ல காரணமா?;
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில், பிறந்த சில நாட்களே ஆண் குழந்தை தனிமையில் இருந்துள்ளது. வெகு நேரமாக தாய் மற்றும் உறவினர்கள் யாரும் வராததால் சந்தேகமடைந்த பொதுமக்கள், மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து குழந்தையை மீட்ட போலீசார் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். குழந்தையின் காதுகளில் கோளாறு இருப்பதால் பெற்றோர் விட்டுசென்று இருக்கலாம் என கருதும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.