பள்ளி கழிப்பறையை மாணவிகள் சுத்தம் செய்யும் வீடியோ : நடவடிக்கை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

வழக்கு தொடுத்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

Update: 2019-03-08 14:01 GMT
பள்ளிக் கழிப்பறையை மாணவிகள் சுத்தம் செய்ததாக, வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், பூஞ்சேரி கிராமத்தில் செயல்படும் அரசு உதவிபெறும் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில், கழிப்பறையை சுத்தம் செய்ய மாணவிகள் ஈடுபடுத்தப்படுவதாக அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து ஆசிரியையின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு  நீதிபதி மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கின் விசாரணை அறிக்கை அடிப்படையில், புகார் தாரரின் நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு,  வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்