மருத்துவமனை கட்டுவதில் மோசடி : பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவு அதிகாரிகள் மீது வழக்கு

மதுரையில் மருத்துவமனை கட்டுவதற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த‌ பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-03-07 08:18 GMT
மதுரையில் மருத்துவமனை கட்டுவதற்கு போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த‌ பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், உள்கட்டமைப்புக்காக PMSSY என்ற பெயரில் மத்திய அரசு சுமார் 2 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது. அந்த பணத்தை, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு கீழ் செயல்படும் மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் முறையாக டெண்டருக்கு விடாமல், தங்கள் உறவினர்களுக்கே ஒதுக்கீடு செய்துள்ளதாக புகார் எழுந்த‌து. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போலியான ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதனை தொடர்ந்து, மதியழகன், காசி பாண்டியன், செல்வராஜ், மீனாள் ஆகிய பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவை சேர்ந்த அதிகாரிகள் உள்பட, 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்