"பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் முறைகேடு" : சாலை மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள் கைது
தஞ்சை மருத்தவகல்லூரி சாலையில் மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 138 கோடி ருபாய் பயிர் காப்பீட்டு தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் தஞ்சை மருத்தவகல்லூரி சாலையில் மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.