பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை சூழ்ந்து கொண்டு கதறிய மாணவர்கள்...
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவரை மாற்றக்கூடாது என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.;
திருப்பூர் வெள்ளியங்காடு அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ் என்பவரை, பெரிச்சிபாளையம் பள்ளிக்கு மாற்றி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது . இதனையடுத்து உத்தரவு நகலை பெற பள்ளிக்கு பெற வந்த சுரேசை, சூழ்ந்து கொண்டு மாணவர்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், ஆசிரியர் சுரேஷை, பணி மாறுதல் செய்ய கூடாது என, ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்.