"விபத்து ஆவணங்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்" - காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி எச்சரிக்கை

வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வில்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

Update: 2019-01-23 20:26 GMT
வாகன விபத்து தொடர்பான ஆவணங்களை  காவல்துறை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வில்லை எனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விபத்து நடந்தவுடன் அது தொடர்பான விசாரணை ஆவணங்கள், பாதிக்கப்பட்டவர்களின் செல்போன் எண் மற்றும் முழு விவரங்களை, உடனுக்குடன் மாநில குற்ற ஆவண காப்பகம் உருவாக்கிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 
இந்த உத்தரவை மீறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்