நலவாழ்வு முகாமில் குதூகலிக்கும் யானைகள் உணவிற்காக தினசரி 10 டன் பசுந்தீவனம் வரவழைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளுக்கு, தினசரி, ஏழு முதல் 10 டன் வரையிலான பசுந்தீவன வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Update: 2019-01-19 04:24 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் நலவாழ்வு முகாமில் உள்ள யானைகளுக்கு, தினசரி, ஏழு முதல் 10 டன் வரையிலான பசுந்தீவன வகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலை மாலை என இரண்டு வேளையும் நடைப்பயிற்சி செய்யும் யானைகள், பின்னர் ஷவரில் ஆனந்தமாக குளியல் போடுகின்றன.  பின்னர் அரிசி, பச்சைப்பயிறு, கொள்ளு உப்பு மஞ்சள் ஆகிய தானியவகைகளுடன் ஆயுர்வேத மருந்துகள் கலந்த கலவை உணவாக வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து கூந்தல்பனை, தென்னைமட்டை, சோளத்தட்டு போன்றவையும் வழங்கப்படுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்