அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.;
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள். 118 வயதான இவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள்..பேரப்பிள்ளைகள் 22 பேர்..
கொள்ளுப்பேர பேத்திகள் 40 பேர்.. நான்கு தலைமுறைகளை கண்டும் தளராமல் இருந்து வந்த நல்லம்மாள் உயிரிழந்தார்.
* தன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வந்ததே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறப்படுகிறது..
* நல்லம்மாளின் உடலை மேளதாளங்களுடன் வெடி வெடித்து கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.