சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவுகள் : தமிழக தேர்ச்சி விகிதம் பாதியாக குறைவு

சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

Update: 2018-12-21 19:34 GMT
யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ். , ஐ.பிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய குடிமை பணிகளுக்கான தேர்வை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதற்கட்ட தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஆறரை லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். அவர்களில் 10 ஆயிரம் பேர் முதன்மை தேர்வு எழுத தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

* சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. ஆயிரத்து 994 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து 
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. 

* பதவி இடங்களின் எண்ணிக்கை குறைவே இதற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், எதிர்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற கூடுதல் பயிற்சி மையங்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்