செல்ல நாய்க்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குடும்பம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல்- மதனா தம்பதியர், தங்கள் நண்பரிடம் இருந்து நாட்டு நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்தனர்.;
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல்- மதனா தம்பதியர், தங்கள் நண்பரிடம் இருந்து நாட்டு நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்தனர். அதற்கு டைகர் என பெயரிட்டு தங்கள் குழந்தை போலவே வளர்த்து வந்தனர். இந்த நிலையில் டைகரின் முதல் பிறந்தநாள் வரவே, அதை உற்சாகமாக கொண்டாட முடிவெடுத்த குடும்பத்தினர், இரவு 12 மணிக்கு கேக் வெட்டி அதை செல்ல நாய்க்குட்டிக்கு ஊட்டி மகிழ்ந்தனர். தங்கள் குடும்பத்தில் ஒருவராக செல்ல நாயையும் கருதுவதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.