நாய் கடித்ததில் இறக்கை துண்டிக்கப்பட்ட மயில்...

ஈரோடு அருகே நாய் கடித்ததில் காயமடைந்த மயில் மீட்கப்பட்டு அதற்கு சேலத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.;

Update: 2018-11-30 12:05 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வயல் வெளியில் மயில் ஒன்று இறக்கை துண்டாகி விழுந்து கிடந்தது. இதுகுறித்த தகவலறிந்த விவசாயிகள் மயிலை வனச்சரகரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த மயிலுக்கு சத்தியமங்கலம் வன கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய் கடித்ததில் மயிலின் இறகு துண்டானதால் அதனால் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த மயிலை சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இறக்கை முறிந்த பகுதியில் பிளேட் வைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. மயக்கம் தெளிந்த பிறகு மயிலுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், அதன்பிறகு வனப்பகுதியில் விடப்படும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்