வீடு கட்ட அனுமதி வழங்க ரூ.10,000 லஞ்சம் : உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை

வீடு கட்ட அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-11-30 10:50 GMT
வீடு கட்ட அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் உதவி பொறியாளராக இருந்த ராமலிங்கம்,  கடந்த 2012-ல் லோகநாதன் என்பவர் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லோகநாதன் அளித்த புகாரின் பேரில், லஞ்சம் வாங்கிய போது ராமலிங்கம்  கைது செய்யப்பட்டார். திருப்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், ராமலிங்கத்திற்கு 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன்,  5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்