சர்க்கார் கூடுதல் கட்டண விவகாரம் மதுரை திரையரங்குகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2018-11-26 08:21 GMT
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'சர்கார்' படத்துக்கு 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், திரையரங்கு உரிமத்தை ரத்து செய்யுமாறு மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 'சர்கார்' படத்திற்கு  கூடுதல் கட்டணம் வசூலித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் நவம்பர் 6 முதல் 16 ஆம் தேதி வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்