அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர் - கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இடமாற்றம்
திருவாரூரில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
திருவாரூரில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அரசு மருத்துவமனைக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது. தற்போது சூழந்துள்ள தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால, உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.