பசும்பொன்னில் பேனர் கிழித்த வழக்கு : 66 பேருக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
பசும்பொன்னில் தமிழக முதலமைச்சரின் வரவேற்பு பேனர் கிழித்தது தொடர்பான வழக்கில், 66 பேருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.;
பசும்பொன்னில் தமிழக முதலமைச்சரின் வரவேற்பு பேனர் கிழித்தது தொடர்பான வழக்கில், 66 பேருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது. அதிமுகவினர் புகாரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முன்ஜாமின் அளிக்கப்பட்ட 66 பேரும் கமுதி காவல்நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்திட வேண்டும் என அவர் ஆணையிட்டுள்ளார்.