இந்தோனேஷிய பெண்ணை மணந்த தமிழக இளைஞர்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இந்தோனேஷியா நாட்டுப் பெண்ணுக்கும் தமிழக இளைஞருக்கும் தமிழ் கலாசார பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தேறியது.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனியாண்டி. இவரது மகன் கார்த்திகேயன், டிப்ளமோ முடித்து விட்டு சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடன் பணியாற்றிய இந்தோனேஷியாவை சேர்ந்த பெர்லிஸ் என்பவர், கார்த்திகேயனை, கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் காதலர்கள், இருவரும், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பள்ளத்தூரில் உள்ள மணமகன் வீட்டில் உறவினர்கள் ஆசி வழங்க,மாங்கல்யம் அணிவித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மாலை மாற்றி திருமணம் விமரிசையாக, நடைபெற்றது.