ஜெ. சொத்துகளை நிர்வகிக்க உரிமை கோரி தீபக் மனு : 29-ந் தேதி ஆட்சேபம் தெரிவிக்கலாம் என அறிவிப்பு

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அனுமதி கோரி, தீபக் தாக்கல் செய்த மனு குறித்து 29ம் தேதி ஆட்சேபங்கள் தெரிவிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-11-14 08:46 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால், அவரது சொத்துகளை நிர்வகிக்க அனுமதி கோரி, அவரது சகோதரர் மகன் தீபக் சார்பில், வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்கள் பதிவு  செய்யும் மாஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த மனு குறித்து ஆட்சேபங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, ஜெயலலிதா சொத்துகளில் உரிமை கோருபவர்கள், நீதிமன்றம் நிர்வாக சான்றிதழ் வழங்கும் முன், வரும் 29ஆம் தேதி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள வாக்குமூலங்களை பதிவு செய்யும் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபம் தெரிவிக்கும் இந்த நடைமுறைக்குப் பின் இந்த வழக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிகிறது.
Tags:    

மேலும் செய்திகள்