சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் டேலியா மலர்

ஊட்டி மலைப்பாதையில் பூத்து குலுங்கும் மர டேலியா மலர்கள் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்கின்றன.

Update: 2018-10-27 04:11 GMT
ஊட்டி தொட்டபெட்டா சாலை, உட் ஹவுஸ், தாவரவியல் பூங்கா, கல்லட்டி மலை பாதை, அவலாஞ்சி சாலை, போன்ற பகுதிகளில் நீலம், வெள்ளை வண்ணங்களில் மர டேலியா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது போல் உள்ள இந்த மலர்களில் இருக்கும் தேனை பருக தேனீக்கள் வட்டமிட்டு வருகின்றன. டேலியா மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், அத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்