அம்மனுக்கு 50 சவரன் தங்கநகை அலங்காரம்
50சவரன் தங்க நகை மற்றும் 10கிலோ வெள்ளி மூலம் கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து;
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீஅறம் வளர் நாயகி சமேத ஸ்ரீகயிலாசநாதர் ஆலயத்தில் 42 ஆம் ஆண்டாக நவராத்திரி கொண்டாட்டப் பட்டு வருகிறது. 6 ஆம் நாளான நேற்று , 25 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகள், 50சவரன் தங்க நகை மற்றும் 10கிலோ வெள்ளி மூலம் கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து . அம்மனின் கஜலட்சுமி அலங்காரத்தை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.